ஆகஸ்ட் 8-ல் ஒடிசா செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ல் ஒருநாள் சுற்றுப் பயணமாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 
அமித் ஷா (கோப்புப்படம்)
அமித் ஷா (கோப்புப்படம்)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ல் ஒருநாள் சுற்றுப் பயணமாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த இடத்திற்குச் சென்று பிரஜாதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் கலந்துகொள்கிறார். 

புவனேஸ்வர் வந்தடைந்த பிறகு, ஷா ஸ்ரீ லிங்கராஜ் கோயிலில் தரிசனம் செய்து, பின்னர் கட்டாக் செல்கிறார், அங்கு அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடத்தைப் பார்வையிடுவார். 

பின்னர், கட்டாக்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் ஒடியா நாளிதழின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரஜாதந்திரத்தின் அம்ருத உதாசவ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 

அன்று மாலை புவனேஸ்வரின் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தலைவராக 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறித்த புத்தகமான மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தகத்தின் ஒடிசா அத்தியாயத்தை உள்துறை அமைச்சர் வெளியிடுகிறார். 

2001ல் குஜராத்தின் முதல்வராக இருந்து, 2014 மற்றும் 2019ல் மீண்டும் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com