கேரளத்தில் கனமழை; நடுக்காட்டில் சிக்கிக் கொண்ட 3 கர்ப்பிணிகள் மீட்பு

கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?


திரிசூர்: கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

காட்டில் வசித்து வரும் பழங்குடியின மக்களில் மூன்று பெண்கள் கர்ப்பிணிகளாக இருந்த நிலையில், கனமழை பெய்ததால் காடு முழுக்க வெள்ளக்காடானது.

அங்கி சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளையும் வனத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே மூன்று கர்ப்பிணிகளில் ஒருவர் வனப்பகுதிக்குள்ளேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டதால், வனத்துறையினர் அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்துவிட்டு, மற்ற இரண்டு கர்ப்பிணிகளையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

ஒருவர் ஆறு மாதம் மற்றொருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளனர்.  அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒப்புக்கொள்ள வைத்தனர். பெரிங்கல்குத் அணைக்கட்டைத் தாண்டி, படகு வழியாக, மிகப்பெரிய சவலான பாதையைக் கடந்து கர்ப்பிணிகளை மீட்கப்பட்டுள்ளனர்.

தீவிர முயற்சி மேற்கொண்டு கர்ப்பிணிகளை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com