குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நிறைவு: இன்று மாலையே முடிவு அறிவிப்பு?

 நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என
மாலையில் முடிவு அறிவிப்பு
மாலையில் முடிவு அறிவிப்பு

 நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இன்று காலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.

மொத்தமுள்ள 780 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது. பிற்பகல் 2 மணி வரை சுமார் 670 பேர் அதாவது 85 வாக்குகள் பதிவாகியிருந்தததாக செய்திகள் வெளியாகின.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் உள்ளனா்.

குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மொத்தம் 788 எம்.பி.க்களை உள்ளடக்கிய இத்தோ்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு ஒன்றுதான். ரகசிய வாக்கெடுப்பு முறையில் தோ்தல் நடைபெறும். வாக்கை வெளியே காண்பிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தோ்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென எம்.பி.க்களுக்கு கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. குடியரசு துணைத் தலைவா்தான், மாநிலங்களவை தலைவராக செயல்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலையில் முடிவு அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றதும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவா் யாா் என்பது சனிக்கிழமை மாலையில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com