பார்த்தா-அர்பிதா வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20-30 லட்சம் பணப்பரிவர்த்தனை

பார்த்தா சட்டர்ஜி - அர்பிதா முகர்ஜியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20 - 30 லட்சம் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத் துறை விசாரணயில் தெரிய வந்துள்ளது.
பார்த்தா-அர்பிதா வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20-30 லட்சம் பணப்பரிவர்த்தனை
பார்த்தா-அர்பிதா வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20-30 லட்சம் பணப்பரிவர்த்தனை

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி - அர்பிதா முகர்ஜியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20 - 30 லட்சம் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத் துறை விசாரணயில் தெரிய வந்துள்ளது.

பல்வேறு வணிக நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தா டெக்ஸ்ஃபேப் என்ற நிறுவனம், அர்பிதாவின் குடியிருப்பு முகவரில் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்துக்கு அலுவலகமோ, ஊழியர்களோ இருக்கவில்லை.

இதுபோல, வியோமோர் ஹைரைஸ் தனியார் நிறுவனமும் அதே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனம் கடந்த கரோனா பேரிடர் காலத்தில் அதன் ஐந்து வங்கிக் கணக்குகளிலிருந்து பல்வேறு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்அடிப்படையில் நாள்தோறும் ரூ.20  முதல் 30 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து பார்த்தாவின் மகள் சோஹினி மற்றும் மருமகன் கல்யான்மோய் ஆகியோர் கொல்கத்தாவுக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அர்பிதாவுக்கு பங்குகளை விற்பனை செய்யத மிகப்பெரிய நிறுவனத்தின் பங்குதாரர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.

பார்த்தாவின் மனைவி பாப்ளி அண்மையில் மரணமடைந்தார். இவரது பெயரும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது. ஆனந்தா டெக்ஸ்ஃபேன் நிறுவனத்தில் தனக்கிருந்த 15 சதவீத பங்குகளை பாப்ளி, 2017ஆம் ஆண்டு அர்பிதா இயக்குநராக இருந்த நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். அதே நாளில் சோஹினியும் கால்யான்மோயும் தங்களது பங்குகளை நேரடியாகவே அர்பிதாவுக்கு விற்றுள்ளனர் என்று அமலாக்கத் துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.

நாட்டில் எரிவாயு உருளை மானியத்துக்காக வங்கிக் கணக்கைத் தொடங்கிய ஏழை, எளிய மக்கள், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததால், அதில் விழும் மாத சொற்ப மானியத் தொகைக் கூட அபராதமாகப் பிடிக்கப்பட்டுவிடுகிறதே என்று வாடி வதங்கி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் கைதான பார்த்தா - அர்பிதாவின் வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20 - 30 லட்சம் அளவுக்கு பணப்பரிவர்த்தனை அதுவும் முறைகேடு, ஷெல் நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com