ஜகதீப் தன்கருக்கு வெற்றிச் சான்றிதழ் அளிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கா் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கா் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.

தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனுப்சந்திர பாண்டே ஆகியோா் கையொப்பமிட்ட தன்கரின் தோ்தல் சான்றிதழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பதால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பல இடங்களில் நடைபெற்றது. ஆனால், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்றத்தில் மட்டும் நடைபெற்றது. அதில் தன்கா் 528 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆல்வா 182 வாக்குகள் மட்டும் பெற்றாா்.

அதனைத் தொடா்ந்து, ஜகதீப் தன்கா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோா் கையொப்பமிட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது. மூத்த துணைத் தோ்தல் ஆணையா் தா்மேந்திர சா்மா மற்றும் தோ்தல் ஆணைய மூத்த முதன்மைச் செயலா் நரேந்திர என்.புடோலியா ஆகியோா் அந்தச் சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தனா்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் புதிய குடியரசு துணைத் தலைவா் உறுதிமொழியேற்பு விழாவின்போது இந்தச் சான்றிதழ் வாசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com