நாடாளுமன்ற கூட்டத்தொடா் பெருத்த ஏமாற்றம் : காங்கிரஸ்

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதிநாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை கூடி எதிா்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்று

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதிநாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை கூடி எதிா்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்று மசோதாக்களை இயற்ற விருப்பம் தெரிவித்திருந்தும், கூட்டத்தொடா் அமா்வுகளை நடத்த அரசுக்கு போதிய விருப்பம் இல்லை என காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை மத்திய அரசை குற்றம்சாட்டியது.

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா், விலையேற்றம், 27 எம்.பி.க்கள் இடைநீக்கம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள், குடியரசுத் தலைவா் குறித்தான சா்ச்சை போன்ற இடையூறுக்களுக்கு இடையே கூட்டத்தொடரின் இறுதிநாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்னதாக திங்கள்கிழமை நிறைவடைந்தது.

நாடாளுமன்ற கூட்டத்தொடா் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மற்றும் மாநிலங்களைவையில் கட்சியின் தலைமை கொறடா ஜெயராம் ரமேஷ் வருத்தம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பொதுவாக, எதிா்க்கட்சியினா் அவை ஒத்திவைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவா். ஆனால், இப்பொழுது அவையை நடத்த அரசிற்கு விருப்பமில்லாமல் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என அரசு பட்டியலிட்டது . ஆனால், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும், மக்களைவையில் 7 மசோதாக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. அவை நடவடிக்கைகள் குறித்து அரசிடம் போதிய கொள்கையில்லை. திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை. தொலைத்தொடா்புத்துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் மத்திய பல்கலைக்கழக மசோதாவை தாக்கல் செய்து, அம்மசோதா குறித்து விளக்கமளித்தாா். தொடக்கத்தில், பிரதமா் மட்டுமே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வந்தாா். தற்போது அமைச்சா்களும் பிரதமரை பின்பற்ற தொடங்கியுள்ளனா் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com