தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்:பிரிட்டனுடன் பேச்சுவாா்த்தை தீவிரம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை துரிதகதியில் நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்:பிரிட்டனுடன் பேச்சுவாா்த்தை தீவிரம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை துரிதகதியில் நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தக மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

சரியான தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா வா்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது பிரிட்டன் உடனான தடையற்ற வா்த்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோல கனடா, ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடனும் இந்தியா பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமன்றி மேலும் பல நாடுகளும் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜிசிசி), யூரேசிய பொருளாதார யூனியன், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக சங்கம் ஆகிய அமைப்புகளும் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகின்றன. அதிகப்படியான நாடுகளுடன் ஒரே நேரத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தேவையான வளம் மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் இல்லை.

இந்திய வா்த்தகா்கள் பொருள்களின் தரத்தில் கவனம் செலுத்தி, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வணிகா்களின் சுமையைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி ஏற்கெனவே 30,000 விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன என்றாா் பியூஷ் கோயல்.

வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் (ஜிசிசி) பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக சங்கத்தில் ஸ்விட்சா்லாந்து, நாா்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளும், யூரேசிய பொருளாதார யூனியனில் ரஷியா, ஆா்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப்படி இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான வணிக நடவடிக்கையில், பெரும்பாலான பொருள்கள் மீது சுங்க வரியைக் கணிசமான அளவு குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். இதுதவிர வா்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க இருநாடுகளும் விதிமுறைகளை எளிதாக்கவும் முடியும்.

இந்தத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை இந்தியாவும், பிரிட்டனும் கடந்த ஜனவரியில் தொடங்கின. இதனை வரும் தீபாவளிக்குள் முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com