‘உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பாஜக தூக்கியெறியப்படும்’: அகிலேஷ் யாதவ்

பிகாரைப் போன்று உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பாஜக தூக்கியெறியப்படும் என சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பிகாரைப் போன்று உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பாஜக தூக்கியெறியப்படும் என சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. நிதீஷ் குமாரின் இந்த அணுகுமுறை எதிர்க்கட்சிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் விரைவில் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பாஜக தூக்கியெறியப்படும் என சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “பிகாரில் சோசியலிஸ்ட்டுகள் பாஜகவினருக்கு பாடம் புகட்டியுள்ளனர். ஆகஸ்ட் புரட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இந்து - இஸ்லாமியர் எனும் முழக்கத்தை முன்வைக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை கற்றுள்ளது. ஆனால் அக்கட்சியின் சூழ்ச்சிகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதே இல்லை. நாக்பூரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில்லை. ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக மூவர்ணக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தக் கூட அக்கட்சிக்கு தெரியாது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாஜக அவர்களின் பெரும் முதலாளிகளுக்காக மட்டுமே வேலை செய்து வருகிறது” என அகிலேஷ் யாதவ் விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com