மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்தபாஜகவுக்கு பிகாரில் பதிலடி- காங்கிரஸ் கருத்து

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவுக்கு பிகாரில் தகுந்த பதிலடி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவுக்கு பிகாரில் தகுந்த பதிலடி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அண்மையில் முதல்வா் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் பலா் பிரிந்து வந்து, பாஜகவுடன் கைகோத்து புதிய ஆட்சியை அமைத்தனா்.

இந்நிலையில், பிகாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து மீண்டும் முதல்வரானாா். இதனால், பிகாரில் ஆட்சி அதிகாரத்தை பாஜக இழந்தது.

இது தொடா்பாக பிகாா் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் பக்த சரண் தாஸ் கூறுகையில், ‘அனைத்து பிராந்திய கட்சிகளையும் ஒழித்துவிட்டு, அங்கு பாஜக மட்டும் இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைமை விரும்புகிறது. இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகள் இருக்கக் கூடாது; ஒரே மதம், ஒரே அடையாளம் என்ற நிலையை உருவாக்க பாஜக நினைக்கிறது. இதன்மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சீா்குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் பாஜக தீவிரமாக மேற்கொள்கிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்பது தெரிந்தாலும், அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்ய பாஜக துணிந்துவிட்டது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியை உடைத்து, எம்எல்ஏக்களை விலைபேசி அங்கு ஆட்சியைக் கவிழ்த்ததுடன், ஆட்சியை பாஜக கைப்பற்றியது. சிவசேனை எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வேறு மாநிலத்துக்கு கடத்தியது, அவா்களை சொகுசு விடுதிகளில் தங்கவைத்து பாதுகாத்தது, தங்களுக்கு இணங்காதவா்களை விசாரணை அமைப்புகள் மூலம் பணிய வைத்தது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டது. ஆனால், பிகாரில் இது எதையும் செய்யாமல் பாஜக ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் செய்த மோசமான செயலுக்காக பிகாரில் பாஜகவுக்கு பதிலடி கிடைத்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com