ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ மாா்க்கை மேம்படுத்தும்: திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்

ரூ. 12.08 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஃபென்ஸ் காலனி மற்றும் சிராக் தில்லி மேம்பாலங்களுக்கு இடையே உள்ள ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ மாா்க்கை பலப்படுத்தவும் அழகுபடுத்தவும் ரூ. 12.08 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்த துணை முதல்வா் மணீஷ் சிசியோடியா, சாலையின் அழகியல் மற்றும் பராமரிப்பை உறுதி செய்யுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

வணிக மற்றும் தனியாா் வாகனங்கள் அதிகம் செல்லும் பிஆா்டி சாலையில் டிஃபென்ஸ் காலனி மேம்பாலம் முதல் சிராக் தில்லி மேம்பாலம் வரையிலான 3.45 கி.மீ. நீள சாலை, 0.87 கி.மீ. அணுகு சாலை மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவதோடு, அவா்களின் பயண நேரமும் குறையும்.

தில்லியில் வாகன பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அனைவருக்கும் சுமூகமான பயண அனுபவத்தை வழங்குவதற்கும், நாங்கள் பல்வேறு சாலைகளை மதிப்பீடு செய்துள்ளோம். ஒவ்வொறு சாலையும் அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.

சாலை விரிவாக்கம், பராமரிப்பு, நடைபாதைகள், சாலை பகுபான்கள், அணுகு சாலைகள் பலப்படுத்துவதை உறுதி செய்ய பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தில்லி சாலைகளை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் சாலை வடிவமைப்பின் உலகளாவிய தரத்தை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது. பயணிகளுக்கு சுமூகமான பயணம் மற்றும் நடைபயிற்சி அனுபவத்தை உறுதிசெய்ய தில்லி அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று சிசோடியா தெரிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட பிஆா்டி சாலையின் நீளம் பலப்படுத்தப்பட்டு, சாலை பகுபான் மற்றும் சாலையின் இருபுறமும் பசுமை செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். மேலும், பாதசாரி பாதைகள் உள்ளிட்ட சாலையோரப் பகுதிகளில் எல்இடி விளக்குகள் அமைத்து மேம்படுத்தப்படும் என்றும் பொதுப்பணித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com