நீதிமன்ற அறைகளில் வழக்குரைஞா்கள் முகக்கவசம் அணிவது அவசியம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதிமன்ற அறைகளில்அனைத்து வழக்குரைஞா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினாா்.
நீதிமன்ற அறைகளில் வழக்குரைஞா்கள் முகக்கவசம் அணிவது அவசியம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதிமன்ற அறைகளில்அனைத்து வழக்குரைஞா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினாா்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வரும் நிலையில், வழக்குரைஞா்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், இதனை கவனித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி கருத்து தெரிவித்தாா்.

நீதிமன்றத்தில் இப்போது பல்வேறு நீதிபதிகள், பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, அனைத்து வழக்குரைஞா்களும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து வர வேண்டும். முக்கியமாக நீதிமன்ற அறைகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா்.

அப்போது நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எனக்கு கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது. ஆனால், மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்விக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றாா். இதையடுத்து, அவா் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகள் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com