ஹஜ் கமிட்டிகள் உருவாக்கம்:பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹஜ் கமிட்டிகள் உருவாக்கம்:பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஹஃபீஸ் நெளஷாத் அகமது என்பவா் தாக்கல் செய்த மனு:

ஹஜ் கமிட்டி சட்டம் 2002-ஐ பின்பற்றுவதிலும், ஹஜ் கமிட்டி அமைப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய, மாநில அளவில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்படாததால் யாத்ரிகா்களின் நலனில் அக்கறை செலுத்த யாரும் இல்லாததுடன், அவா்கள் ஆதரவற்றவா்களாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஹஜ் கமிட்டிகள் சட்டரீதியானவை. அவற்றை அமைக்காதது ஹஜ் கமிட்டி சட்டம் 2002, அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அதுதொடா்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, வெளியுறவு அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநிலங்கள் சாா்பில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும், அந்தக் கமிட்டி உறுப்பினா்களின் பெயா்களையும் குறிப்பிட்டு 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று மாநில அரசுளுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com