கர்நாடகம்: மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துகள் அறிமுகம்

மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பெங்களூருவில் மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (ஆகஸ்ட் 14) தொடக்கி வைத்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பெங்களூருவில் மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (ஆகஸ்ட் 14) தொடக்கி வைத்தார்.

புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து கர்நாடக அரசு செயல்படுத்துகிறது. ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் கர்நாடக அரசிற்கு 300 மின்சாரப் பேருந்துகள் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது 75 மின்சாரப் பேருந்துகள் சேவை இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத் தலைவர் மகேஷ் பாபு பேசியதாவது: “ இந்த மின்சாரப் பேருந்துகள் அடுத்த தலைமுறைக்கான போக்குவத்திற்கான அறிமுகம் ஆகும். கரியமில வாயுவினைக் கட்டுப்படுத்துவதில் இந்த மின்சாரப் பேருந்துகள் பெரிதும் உதவியாக இருக்கும். சாதாரணப் பேருந்துகளினால் ஏற்படும் கரியமில வாயு அதிகரிப்பானது இந்த மின்சாரப் பேருந்துகளில் இருக்காது. 87 ஆயிரம் மரங்கள் செய்கின்ற வேலையை இந்த மின்சாரப் பேருந்துகள் செய்யப் போகின்றன. கர்நாடக மாநில அரசிற்கு 300 பேருந்துகள் வழங்குவதாக கடந்த ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் 75 பேருந்துகளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார். 

இந்த பேருந்துகள் புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. மிகுந்த திறன் கொண்டவை. இந்த பேருந்துகளில் லித்தியம் மின்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com