
ஆறு மாதத்தில் இல்லாத வகையில் தில்லியில் கரோனா பலி அதிகரிப்பு
புது தில்லி: கடந்த 6 மாதத்தில் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தில்லியில் 51 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தில்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் தற்போது கரோனா பலி அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் நாட்டில் கரோனா பாதிப்பு மூன்றாவது வாரமாகக் குறைந்து வரும் நிலையில் தில்லியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் ஆகஸ்ட் 8 - 14ஆம் தேதி வரையிலான வாரத்தில் 307 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். ஞாயிறன்று சில மாநிலங்களில் பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. அதனோடு சேர்த்தால் மொத்த பலி எண்ணிக்கை 310 ஐ எட்டும். அவ்வாறு இருந்தால் மார்ச் மாதம் முதல் வாரத்துக்குப் பிறகு பதிவாகும் அதிக உயர்பலியாகும்.
மார்ச் முதல் வாரத்தில் 626 பேர் பலியாகினர். கடந்த வாரம் கரோனாவுக்கு 295 பேர் பலியாகினர்.