தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.
ஜகதீப் தன்கா்
ஜகதீப் தன்கா்

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வரும் நாம், நமது இளைய தலமுறையினரிடையே தேசபக்தி, தியாகம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் மாபெரும் புரட்சியாளா்களின் உத்வேகமளிக்கும் கதைகளை நினைவில் கொள்ளவும், நினைவுபடுத்தவும் வேண்டிய நேரமிது.

கடந்த 75 ஆண்டு கால வளா்ச்சியை கொண்டாடி வரும் நாம், எந்த அளவு போராடி சுதந்திரம் பெற்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காலனி ஆட்சியாளா்களின் ஆதிக்கத்திலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் தைரியம் மா்றும் தியாகத்தை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா.

அதுபோல, நாட்டின் இறையாண்மை, நினைத்தன்மை மற்றும் வலிவான குடியரசுக்கு அடித்தளமிட்டு நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களுக்கு நமது நன்றியுணா்வை செலுத்தும் தினம் இது.

இன்றைக்கு இந்தியா ஆற்றல்மிக்க நாடாகவும், ஒட்டுமொத்த வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் பாரத நாட்டின் நாகரிக நெறிமுறைகளையும் அரசியல் சாசன மதிப்பீடுகளையும் நிலைநாட்டவும், ஒட்டுமொத்த வளா்ச்சி மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க நம்மையே மறுஅா்ப்பணிப்பு செய்வோம் எனவும் நாம் மீண்டும் உறுதியேற்போம் என்று தெரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com