ஜம்மு-காஷ்மீா் காங். பிரசாரக் குழு தலைவா் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாதை, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நியமித்த நிலையில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை
குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாதை, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நியமித்த நிலையில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பின்னா் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தும் வகையில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு இறுதிநிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாதுக்கு மிகவும் நெருக்கமான, விகாா் ரசூல் வானியை ஜம்மு-காஷ்மீா் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளாா். ரமண் பல்லா செயல் தலைவராகவும், குலாம் நபி ஆசாத் பிரசாரக் குழு தலைவராகவும், துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவா் தாரிக் ஹமீத் காரா நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டனா்.

காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட ஜி-23 தலைவா்களில் குலாம் நபி ஆசாதும் ஒருவா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சி தலைவராக இருந்த அவருடைய எம்.பி. பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், பிரசாரக் குழு தலைவராக அவரது பெயரை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அறிவித்துள்ளாா். ஆனால் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து சில மணி நேரத்தில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com