ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 15 பேர் காயம், 80 செம்மறி ஆடுகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பான் மாவட்டத்தில் மேக வெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் காயமடைந்தனர். 80 செம்மறி ஆடுகள் பலியாகியுள்ளன. 

புதன்கிழமை அதிகாலை ஜவாஹிர் சுரங்கப்பாதைக்கு கீழே உள்ள பனிஹால் பகுதியில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆடு மேய்ப்பவரான மன்சூர் அகமதுவின் மண் வீடு சரிந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பம் உயிர்த் தப்பினர். 

இந்த மண் சரிவில் 15 பேர் காயமடைந்தனர். அகமதுக்கு சொந்தமான 80 செம்மறி ஆடுகள் பரிதாபமாக இறந்தன. 

பனிஹால் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீஸ் குழு மற்றும் தன்னார்வலர்கள் நிலைமையை மதிப்பீடு செய்து வருகின்றனர், என்றார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com