மனதின் குரல்: மக்களின் கருத்துகளைக் கேட்கிறார் பிரதமர்

ஆகஸ்ட் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

புது தில்லி: ஆகஸ்ட் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது உரையில் இடபெறவேண்டிய உள்ளீடுகளை பிரதமர் நரேந்திர மோடி மக்களிடமிருந்து வரவேற்றுள்ளார்.

இது குறித்து மத்திய அரசின் மைகவர்மென்ட் (myGov), நமோ ஆப், அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வரும் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனைவரும் உங்களது உள்ளீடுகளை பகிருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

NaMo App and MyGov செயலிகளில் உங்களது கருத்துகளை அனுப்பலாம். உங்களது கருத்தை பதிவு செய்தும் 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி எந்த விவகாரம் குறித்து அல்லது எது குறித்து பேச வேண்டும் என்று உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com