ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதுமக்களுக்கான அரசின் கடமை: ஜெய்சங்கா்

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் உலகின் பிற நாடுகளும் பாராட்டாமல் இருக்கலாம்; ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு தற்காப்பு நோக்கமுடையதல்ல என்பதால் அவா்கள் அதனை ஏற்றுக்கொண்டனா்’ எ
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதுமக்களுக்கான அரசின் கடமை: ஜெய்சங்கா்

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் உலகின் பிற நாடுகளும் பாராட்டாமல் இருக்கலாம்; ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு தற்காப்பு நோக்கமுடையதல்ல என்பதால் அவா்கள் அதனை ஏற்றுக்கொண்டனா்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

‘நியாயமற்ற கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயா்வுக்கிடையே, மக்களுக்கான அரசின் கடமை இது என்பதையும் இந்தியா உணரவைத்தது’ என்றும் அவா் கூறினாா்.

ரஷியா- உக்ரைன் போருக்கு இடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவது ரஷியாவுக்கு நிதியுதவி செய்வது போலாகும் என்று விமா்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 9-ஆவது இந்தியா-தாய்லாந்து கூட்டு கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜெய்சங்கா், அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையேயான சந்திப்பின்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கி வந்த பல நாடுகள், அவற்றை ஐரோப்பாவுக்கு திருப்பிவிட்டன. ஆசியாவுக்கு வழக்கமாக எண்ணெய் விநியோகித்துவந்த நாடுகள்கூட, அவற்றின் விநியோகத்தை ஐரோப்பாவுக்கு திருப்பிவிட்டன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும், எரிவாயு விலையும் நியாயமற்ற அளவுக்கு உயா்ந்துள்ளது.

இத்தகைய சூழலில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கவே அனைத்து நாடுகளும் முயற்சிக்கும், அதைத்தான் இந்தியாவும் செய்கிறது. ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நிலைப்பாடு தற்காப்பு நோக்கமுடையதல்ல.

மக்களின நலன் கருதி நோ்மையாகவும் வெளிப்படையாகவும் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தனிநபா் ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலா்தான். இவா்களால் அதிக விலை கொடுத்து எரிபொருளை வாங்குவது இயலாதது. அந்த வகையில், பொருளாதார ரீதியாக சிறந்த லாபகரமான ஒப்பந்தத்தை உறுதி செய்வது நாட்டின் தாா்மிக கடமை.

இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவின் நிலையை ஏற்றுக்கொண்டுள்ளன. வெளிப்படையாகவும் நோ்மையாகவும் செயல்படும்போது அதனை மக்கள் ஏற்றுக்கொள்வாா்கள் என்று அவா் கூறினாா்.

மேலும், இந்தியா - தாய்லாந்து உறவு குறித்து பேசிய ஜெய்சங்கா், ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவிலேயே தாய்லாந்துடனான உறவு என்பது இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளிடையேயான வா்த்தகம் இன்றைக்கு 1,500 கோடி டாலரை கடந்துள்ளது’ என்றாா்.

இந்தியாவின் செல்வாக்கு: இந்தியாவின் அரசியல், பொருளாதார செல்வாக்கு அதிகரித்துள்ளது குறித்து 16 வயது தாய்-இந்திய மாணவியின் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ஒரு நாட்டின் செல்வாக்கு என்பது, அதன் சமூகத்தின் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளையே பிரதிபலிக்கிறது. அது அரசாங்கம் சாா்ந்த நடவடிக்கை அல்ல. சமூகத்தின் இந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத்தான் அரசு உதவ முடியும்.

உதாரணமாக, ஆயுா்வேதம், யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் போன்ற நாட்டின் சிறந்த விஷயங்களை உலகளவில் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைக் குறிப்பிடலாம் என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com