நாட்டில் இதுவரை 12 கோடி கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 12 கோடிக்கு அதிகமான கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 12 கோடி கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 12 கோடிக்கு அதிகமான கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படி 12 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்ட நிலையில்,  கரோனா தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 208.95 கோடியைத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 38,64,471 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  1,01,343 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மீட்பு விகிதம் தற்போது 98.58% ஆக உள்ளது, 

கடந்த 24 மணி நேரத்தில் 16,251 பேர் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,36,70,315 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட 88.14 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,62,020 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், 

கரோனா இன்னும் நீங்கவில்லை. அதே நேரத்தில் மக்கள் முன்னெச்சரிக்கை டோஸின் தடுப்பூசி விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்துகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com