ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.
ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு
ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

புது தில்லி: 1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

ஆனால், 2022ஆம் ஆண்டுகளில் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தை இணையதளங்களே விழுங்கி விடுகின்றன. ஊர் என்ன,நாடு, நாடு கடந்து உலகம் என பல விஷயங்களையும் மக்கள் இன்டர்நெட் மூலமே அறிந்து கொள்கிறார்கள்.

இணையதளம் வாயிலாகவே பலரும் தங்கள் கருத்துகள், விருப்பம், விமரிசனம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். சரி, நமது நாட்டில் அவ்வாறு அதிகம் ஊர் வம்பு பேசுவதில் எந்த மாநிலங்கள் முதல் இடத்தில் இருக்கிறது என்றால்..

ஷேர்சுட் எனப்படும் செயலி, நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் அதிகம்பேர் பல தலைப்புகளில் அதிகம் சேட் செய்வதாகவும், தொடர்ந்து மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழகம், பிறகு மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

கன்னட மொழியில் ஏராளமானோர், பல தலைப்புகளில் கலந்துரையாடுவதும், இதுபோன்ற சட்ரூம்களுக்கு நடிகர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com