ஹிமாச்சலில் வெள்ளம், நிலச்சரிவு: 5 பேர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  
ஹிமாச்சலில் வெள்ளம், நிலச்சரிவு: 5 பேர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறுவதாவது,

கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

சம்பா மாவட்ட அவசர அறுவை சிகிச்சை மையம் (டிஇஓசி) சோவாரி தாலுகாவில் உள்ள பானெட் கிராமத்தில் 4.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். 

மண்டியில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் ஒரு சிறுமி உள்பட 13 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு மண்டி-கடோலா-பிரஷர் சாலையில் உள்ள பாகி நுல்லா என்பவரின் வீட்டில் இருந்து அரை கிமீ தொலைவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது, அதே நேரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடைவிடாத மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று காங்க்ரா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com