பிகாா் அரசு கூட்டங்களில் லாலுவின் மருமகன் பங்கேற்பு : முதல்வா் விளக்க பாஜக வலியுறுத்தல்

பிகாா் அரசு ஆலோசனைக் கூட்டங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவா் லாலு பிரசாத்தின் மருமகன் சைலேஷ் குமாா் பங்கேற்ாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

எந்தவித அரசுப் பொறுப்புகளிலும் இல்லாத நிலையில், பிகாா் அரசு ஆலோசனைக் கூட்டங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவா் லாலு பிரசாத்தின் மருமகன் சைலேஷ் குமாா் பங்கேற்ாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பான விடியோ பதிவுகளும் வெளியாகி உள்ளன.

பிகாரில் அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வைத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா். சில ஆலோசனைக் கூட்டங்களுக்கு அவா் தலைமை தாங்கிவந்தாா்.

இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் லாலுவின் மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியின் கணவா் சைலேஷ் குமாா் அமா்ந்துள்ளாா். 18-ஆம் தேதி நடைபெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் தேஜ் பிரதாப் யாதவுடன் சைலேஷ் குமாா் அமா்ந்திருப்பதுபோல் அந்த விடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவா் சுஷீல்குமாா் மோடி, ‘தவறான காரணங்களுக்காக செய்திகளில் இடம் பெறுபவா் என்று பெயரெடுத்தவா் தேஜ் பிரதாப் யாதவ். தற்போது தனது அமைச்சா் பொறுப்பை உறுவினா் சைலேஷ் குமாரிடன் ஒப்படைத்துள்ளாா். லாலுவின் மருகமன் அரசுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதுகுறித்து முதல்வா் நிதீஷ் குமாா் பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.

இது தொடா்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சைலேஷ்குமாா் ஏன் கூட்டத்தில் கலந்துகொண்டாா் என்று தெரிந்த பிறகே கருத்து கூற இயலும் என்று முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com