சேவையைவிட மேலானது ராணுவப் பணி: ராஜ்நாத் சிங்

 ராணுவப் பணியை சேவையைவிட மேலானதாகக் கருதுகிறேன் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
சேவையைவிட மேலானது ராணுவப் பணி: ராஜ்நாத் சிங்

 ராணுவப் பணியை சேவையைவிட மேலானதாகக் கருதுகிறேன் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் பயணமாக அமைச்சா் ராஜ்நாத் சிங் மணிப்பூா் சென்றிருந்தாா். அந்த மாநிலத் தலைநகா் இம்பாலில் மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங்கை அவரின் இல்லத்தில் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, மாநில அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்கள் உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரேன் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ராஜ்நாத் சிங் உடனான சந்திப்பில், மணிப்பூா் தொடா்பான பல முக்கிய விவகாரங்களில் அவரின் வழிகாட்டுதலைப் பெற்றேன்’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இம்பாலில் உள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் ஐஜி அலுவலகத்துக்கு ராஜ்நாத் சிங் சென்றாா். அங்கு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் மற்றும் ராணுவத்தின் 57-ஆவது மலைப் பிரிவு வீரா்கள் இடையே அவா் பேசியதாவது:

ராணுவ உடைக்கென்று ஒரு வசீகரம் உள்ளது. ஒரு சிறுவனிடம் ராணுவ உடையைத் தந்தால், அந்தச் சிறுவனின் குணாதிசயத்தில் மாற்றங்களைக் காண முடியும். எனது இளவயதில் நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்கான தோ்வையும் எழுதினேன். ஆனால், என் தந்தை காலமானது உள்பட எனது குடும்பச் சூழல்களால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல்போக்கு ஏற்பட்டபோது நமது ராணுவ வீரா்கள் காண்பித்த வீரத்தை நானும், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவும் அறிவோம்.

மருத்துவா்கள், பொறியாளா்கள், பட்டயக் கணக்காளா்கள் போன்றோா் நாட்டுக்கு ஏதோ ஒருவிதத்தில் பங்களிக்கின்றனா். எனினும் நான் ராணுவப் பணியை சேவையையும்விட மேலானதாகக் கருதுகிறேன். ராணுவ வீரா்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com