இதுதான் அலட்சியத்தின் உச்சமா..? தலையில் அடிப்பட்ட பெண்ணுக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட அவலம்!

மத்தியப்பிரதேசம் மாநிலம், மொரீனா மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் தலையில் காயம்பட்ட பெண்ணுக்கு ரத்த கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்தி கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள
இதுதான் அலட்சியத்தின் உச்சமா..? தலையில் அடிப்பட்ட பெண்ணுக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட அவலம்!

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம், மொரீனா மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் தலையில் காயம்பட்ட பெண்ணுக்கு ரத்த கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்தி கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோசமான தரமற்ற சுகாதார அமைப்பு, சவக்கிடங்குகள் இல்லாதது, அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு படுக்கை வசதிகள் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற புகார்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறையின் அலட்சியத்தின் உச்சமாக, ஒரு பெண்ணின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு ரத்தக் கசிவை நிறுத்துவற்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்டிருக்கும் மற்றொரு தெளிவான சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம், மொரீனா மாவட்டத்தில் உள்ள போர்சா சுகாதார மையத்திற்கு தலையில் அடிப்பட்ட காயத்துடன் ரேஷ்மா பாய் என்ற பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, அந்தப் பெண்ணின் தலையில் ஆணுறை ரேப்பரை வைத்து கட்டுப்போட்டுள்ளனர். 

அவருக்கு தலையில் வலி அதிகமானதை அடுத்து மொரீனா மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரும் தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு பணியில் இருந்த மருத்துவர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்து  பார்த்தபோது, ​​ரத்தக் கசிவை தற்காலிகமாக நிறுத்துவதற்காக பஞ்சுடன் ஆணுறை உறை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது சம்பவம் குறித்து மொரீனா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், சுகாதார மையத்தின் மருத்துவர் அவசரப் பணியில் இருந்துள்ளார். அப்போது பணியில் இருந்த வார்டு பையனிடம் மருத்துவர் பஞ்சு மேல் சில அட்டைகளை வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவர் ஆணுறை பாக்கெட்டை வைத்து கட்டுப்போட்டுள்ளார். வேறு எந்த காரணமும் இல்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மிஸ்ரா  கூறினார்.  

இந்நிலையில், போர்சா சுகாதார மையத்தின் வார்டு பையன் மாநில சுகாதாரத் துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுகாதார மையத்தில் நிகழ்ந்துள்ள அலட்சியத்தின் உச்ச செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com