கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மையைத் தடுக்க ரூ.30 கோடி ஒதுக்கிய ராஜஸ்தான்

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மையைத் தடுக்கத் தேவையான மருந்துகளை வாங்கவும், கால்நடைகளுக்குச் செலுத்தவும் ரூ.30 கோடியை ஒதுக்கியிருக்கிறது ராஜஸ்தான் மாநில அரசு. 
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மையைத் தடுக்க ரூ.30 கோடி ஒதுக்கிய ராஜஸ்தான்
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மையைத் தடுக்க ரூ.30 கோடி ஒதுக்கிய ராஜஸ்தான்

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மையைத் தடுக்கத் தேவையான மருந்துகளை வாங்கவும், கால்நடைகளுக்குச் செலுத்தவும் ரூ.30 கோடியை ஒதுக்கியிருக்கிறது ராஜஸ்தான் மாநில அரசு. 

பெரியம்மையைத் தடுக்க ரூ.30 கோடி ஒதுக்கியிருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில கால்நடைத் துறை, இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உள்பட 8 மாநிலங்களில் 25000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீநுண்மியால் ஏற்படும் தொற்றுநோயாகும்.

இது ஈ, கொசு போன்றவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது. இந்நோயால் கால்நடைகளுக்கு இறப்பும் ஏற்படலாம்.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய இந்நோய் சமீப காலங்களாக ஆசியாவில் பரவத் தொடங்கியது. கடந்த 2019 ஜூலையில் வங்கதேசத்தில் இந்நோய்ப் பரவல் காணப்பட்டது. அதே ஆண்டில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிஸா போன்ற கிழக்கு மாநிலங்களில் பெரியம்மை நோய்ப் பரவல் காணப்பட்டது.

நிகழாண்டில், முதலாவது பெரியம்மை நோய் பாதிப்பு குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது, 8 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாா் யூனியன் பிரதேசத்தில் இந்நோய்ப் பரவல் காணப்படுகிறது. இந்நோயால் 1.85 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்திலிருந்து 7,300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பெரியம்மை நோயால் கால்நடைகளின் இறப்பு விகிதம் 1-2 சதவீதமாக உள்ளதாகவும், நோய்ப் பரவலை தடுக்கும் விதமாக 17.9 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்நோய் மனிதா்களைத் தாக்குவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2019-இல் மேற்கொள்ளப்பட்ட 19-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள கால்நடைகளின் மொத்த எண்ணிக்கை 19.2 கோடியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com