மும்பைக்கு ஒரே வாரத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை: மும்பையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு பாகிஸ்தான்  எண்ணிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல தகவல்கள் வந்தது. அதில், மும்பையை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள வணிக வளாகங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்த மர்ம நபர், 4 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த வெடிகுண்டை அகற்ற ரூ. 5 கோடி தரவேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த அழைப்பை தொடர்ந்து, ஹோட்டல் முழுவதும் சோதனை செய்த காவல்துறையினர் மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தொடர்ச்சியாக, ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மும்பை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com