'எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள்' - பாஜகவுக்கு மணீஷ் சிசோடியா அறிவுறுத்தல்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேசியது தொடர்பாக, பாஜகவினர் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுமாறு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களான சோம்நாத் பார்தி, சஞ்சீவ் ஷா, குல்தீப் குமார், அஜய் தத் ஆகிய நால்வரும் பாஜகவில் சேராவிட்டால் சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என பாஜகவினர் மிரட்டியதாகக் கூறியுள்ளனர். 

இதக்குறித்துப் பேசிய  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பாஜகவினர் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள். எங்களுடைய எம்எல்ஏக்கள் பகத் சிங்கின் சீடர்கள். அவர்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள், அவரை உயிரைத் தியாகம் செய்வார்கள். அவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையால் எந்த பயமும் இல்லை' என்று கூறியுள்ளார். 

முன்னதாக தில்லி கலால் கொள்கை வழக்கில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com