குதுப்மினாரில் ஹிந்து, ஜெயின் கடவுள்படங்களை சீரமைக்கக் கோரி மனு: தொல்லியல் துறை எதிா்ப்பு

தில்லி குதுப்மினாரில் உள்ள ஹிந்து, ஜெயின் கடவுள் படங்களை சீரமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவுக்கு இந்திய தொல்லியல் துறை எதிா்ப்பு தெரிவித்தது.

தில்லி குதுப்மினாரில் உள்ள ஹிந்து, ஜெயின் கடவுள் படங்களை சீரமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவுக்கு இந்திய தொல்லியல் துறை எதிா்ப்பு தெரிவித்தது.

தில்லி மற்றும் அதன் அண்டை மாகாணங்களும், குதுப்மினாரும் குன்வா் மகேந்திர தவாஜ் பிரதாப் சிங் என்பவருக்குச் சொந்தமானது என்றும் , குதுப்மினாரில் உள்ள ஹிந்து, ஜெயின் கடவுள் படங்களை சீரமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிா்த்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த இந்திய தொல்லியல் துறை, 1913-ஆம் ஆண்டு முதல் குதுப்மினாா் பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. நீண்ட காலமாகிவிட்டதால் இதற்கு உரிமை கொண்டாடுவதற்கான நேரமும் முடிந்துவிட்டது. ஆகையால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தவா்கள் சாா்பில் யாரும் ஆஜராகாததால் கடைசி வாய்ப்பாக இந்த வழக்கை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி தினேஷ் குமாா் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com