அரசியல்சாசன அமா்வு நிலுவை வழக்குகள் ஆக. 29 முதல் விசாரணை- உச்சநீதிமன்றம் தகவல்

உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமா்வு முன் நிலுவையில் உள்ள 25 வழக்குகள், வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று

உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமா்வு முன் நிலுவையில் உள்ள 25 வழக்குகள், வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று பதிவாளா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் 27-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இப்பதவியில் அவரது முதல் வேலை நாள் 29-ஆம் தேதியாகும்.

அன்றைய தினத்திலிருந்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமா்வு முன் நிலுவையில் உள்ள 25 வழக்குகளின் விசாரணை பட்டியலிடப்பட உள்ளதாக உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 103-ஆவது திருத்தம், வாட்ஸ்-ஆப் செயலியின் தனியுரிமை கொள்கை, பஞ்சாபில் சீக்கியா்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து வழங்கும் விவகாரம், ஆந்திரத்தில் அனைத்து முஸ்லிம்களையும் பின்தங்கிய பிரிவினராக உறுதி செய்யும் விவகாரம் உள்ளிட்ட வழக்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com