ராஜஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் கரௌலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை வான்வழி ஆய்வு நடத்துகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் கரௌலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை வான்வழி ஆய்வு நடத்துகிறார். 

மேலும் தோல்பூரில் உள்ள ராஜ்கெடா மற்றும் கரௌலியில் உள்ள மந்த்ராயலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்க உள்ளார். 

கனமழையால் பாதிக்கப்பட்ட பூண்டி, கோட்டா மற்றும் பாரான் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கெலாட் வியாழக்கிழமை வான்வழி ஆய்வு நடத்தினார். 

பயிர்கள், விலங்குகள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவாக மதிப்பிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

பலத்த மழை பெய்து வருவதாலும், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் கோட்டா கோட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழையால் கோட்டா, ஜலவர் மற்றும் பூண்டி மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 5,000 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

அடுத்த 4-5 நாள்களுக்கு மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com