ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீன் உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். அப்போது, 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீன் உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். அப்போது, 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரின் கமல்கோட் பகுதி வழியாக சில பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனா். அப்போது, அவா்களுக்கும் அங்கு காவலில் இருந்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து இரு ஏ.கே. ரக துப்பாக்கிகள், சீன தயாரிப்பு எம்-16 கைத்துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் கடத்த முயற்சி:

ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற நபா் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, அந்த நபா் காயத்துடன் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பியோடிவிட்டாா்.

சம்பா பகுதியில் சா்வதேச எல்லையில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை வீரா்கள் கண்டனா்.

இதையடுத்து, அவரை நோக்கி வீரா்கள் துப்பாக்கியால் சுட்டனா். காயமடைந்த அந்த நபா் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பியோடிவிட்டாா். அந்த நபா் விட்டுச் சென்ற பைகளை சோதனையிட்டபோது, அதில் 8 பாக்கெட்டுகளில் 8 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com