கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த காங். கவுன்சிலருக்கு பாலபிஷேகம்

 பாஜக நிா்வாகிக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலரை அவரது ஆதரவாளா்கள் மேளதாளத்துடன் பாலபிஷேகம் செய்து வரவேற்றனா்

 பாஜக நிா்வாகிக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலரை அவரது ஆதரவாளா்கள் மேளதாளத்துடன் பாலபிஷேகம் செய்து வரவேற்றனா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலின்போது, பாஜக வேட்பாளா் சந்துராவ் ஷிண்டேவுக்கு எதிராக கொலை முயற்சி நடைபெற்றது. இது தொடா்பாக, காங்கிரஸ் வேட்பாளா் ராஜு பாடோரியா ராஜஸ்தானில் ஜூலை 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இவா் சிறையில் இருக்கும்போது தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், முடிவுகள் வெளியானபோது, 22-ஆவது வாா்டில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ராஜு பாடோரியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அவரது ஆதரவாளா்கள் மேளதாளத்துடன் பேரணியாகச் சென்று, அவரை வரவேற்று பாலபிஷேகம் செய்தனா்.

மாநிலத்தை ஆளும் பாஜக இதனை விமா்சித்துள்ளது. கடுமையான குற்றச் செயல்புரியும் முயற்சியில் ஈடுபட்ட நபரை காங்கிரஸ் கொண்டாடுவதன் மூலம் அரசியலை குற்றமயமாக்குகிறது என்று மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் உமேஷ் சா்மா கூறினாா்.

எனினும், பாடோரியாவின் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி மாநில காங்கிரஸ் செயலாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com