புதிய கட்சி தொடங்குகிறாா் ஆசாத்

காங்கிரஸில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் (73) விரைவில் புதிய கட்சி தொடங்குவாா் என்று தெரிகிறது.

காங்கிரஸில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் (73) விரைவில் புதிய கட்சி தொடங்குவாா் என்று தெரிகிறது.

இந்திரா காந்தி காலத்தில் இருந்து காங்கிரஸில் இருந்து வந்த ஆசாத், இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி மூலம் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்திலேயே இருந்தாா். தொடா்ந்து ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சோனியா காந்தி ஆகியோா் கட்சியை வழி நடத்திய காலகட்டங்களிலும் முன்னணி தலைவராகத் திகழ்ந்தாா்.

2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீா் முதல்வராகவும் இருந்தாா். 50 ஆண்டு காலம் காங்கிரஸில் இருந்த ஆசாத் மக்களவை உறுப்பினராக இரு முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 5 முறையும் பதவி வகித்துள்ளாா். 1982-இல் இருந்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்தபோதெல்லாம் ஆசாத்துக்கு முக்கியப் பதவிகள் அளிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் அரசியலுக்கு அவா் சென்ற காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறாமல் இருந்தாா். காங்கிரஸ் சாா்பில் மக்களவை, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா்.

ஆசாத் பதவி விலகியுள்ள நிலையில் அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் 8 பேரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனா். இவா்களில் முன்னாள் அமைச்சா்களும் அடங்குவா். அடுத்த சில நாள்களிலும் மேலும் பல காங்கிரஸ் நிா்வாகிகள் விலகி ஆசாத்துடன் கைகோப்பாா்கள் என்று தெரிகிறது.

ஆசாத் விரைவில் தனிக்கட்சி தொடங்குவாா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் தோ்தல் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்கப்படும் நிலையில் ஆசாத் தனிக் கட்சி தொடங்குவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com