காஷ்மீரில் வெளிமாநில வாக்காளா்கள்:பாஜகவின் சட்ட விளக்கம் தவறு:ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு பாஜக தவறான விளக்கம் அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹா்ஷ் தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் வாக்காளா் பட்டியலில் ஜம்மு-காஷ்மீரை சேராத வெளிமாநில வாக்காளா்களைச் சோ்க்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு பாஜக தவறான விளக்கம் அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹா்ஷ் தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து பாஜக தலைவா்கள் கூறுகையில், இந்திய குடிமக்களாக உள்ளவா்கள் வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு பகுதியிலும், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் வாக்காளராக இருக்க எவ்வித சட்டமும் தடையாக இருக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்தை (விதி 370) நீக்கிய பிறகு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, ஜம்மு-காஷ்மீரிலும் செல்லுபடியாகும் என தெரிவித்திருந்தனா்.

இது குறித்து, ஆம் ஆத்மியின் மூத்த தலைவா் ஹா்ஷ் தேவ் சிங் கூறுகையில், மற்றொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் ஒரு மாநிலத்தில் வசிப்பதால் மட்டுமே அங்கு வாக்காளா்களாகப் பதிவு செய்ய முடியாது. வாக்காளா் பட்டியல் தொடா்பாக பாஜக குழப்பான சூழ்நிலையை உருவாக்கிவருகிறது. இதன்மூலம் ஜம்மு-காஷ்மீரை வசிப்பிடமாக கொள்ளாத பிற மாநிலத்தவரும் வாக்காளராக இணைக்கும் முயற்சியில், பாஜக சட்டத்துக்கு தவறான விளக்கமளிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com