சா்ச்சை கருத்து: கேரள மாா்க்சிஸ்ட் எம்எல்ஏவுக்கு எதிரான மனு மீது நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

சா்ச்சை கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் கேரள சிபிஐ (எம்) எம்எல்ஏ கே.டி. ஜலீல் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரும் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திலக் மாா்க் காவல் நிலைய

சா்ச்சை கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் கேரள சிபிஐ (எம்) எம்எல்ஏ கே.டி. ஜலீல் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரும் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திலக் மாா்க் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்தவா் கே.டி ஜலீல். அதன் பிறகு, இம்முறை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மாா்க்சிஸ்ட் எம்எல்ஏவாக உள்ளாா். கே.டி. ஜலீல் கேரள சபை வெளிநாடு வாழ் இந்தியா் நலத் துறை கமிட்டியில் உறுப்பினராக இருந்து வருகிறாா். கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறாா். அண்மையில் இவா் காஷ்மீா் மாநிலத்திற்கு சென்றிருந்தாா். அது குறித்து தனது முகநூலில் பதிவிட்டிருந்தாா். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீா் என்றும், ஜம்மு காஷ்மீா் பகுதியை சோ்த்து இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்றும் குறிப்பிட்டிருந்ததாக சா்ச்சை எழுந்தது.

இந்தக் கருத்துக்காக ஜலீல் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லியில் திலக் மாா்க் காவல் நிலையத்தில் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.எஸ். மணி புகாா் அளித்திருந்தாா். பின்னா், தனது புகாா் மனு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறி, இதே விவகாரம் தொடா்பாக அவா் தில்லி நீதிமன்றத்தில் தனிப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்-வழக்குரைஞா் ஜி.எஸ். மணி நேரில் ஆஜராகி, ‘சா்ச்சைக்குரிய கருத்தை சமூக ஊடகத்தில் கே.டி.ஜலீல் பதிவிட்டுள்ளாா். அவருக்கு எதிராக 13.08.2022-இல் தில்லி திலக் மாா்க் காவல் நிலையத்திலும், காவல் ஆணையரிடமும் புகாா் அளித்தேன். அதன் பிறகு 18.08.2022-இல் புதுதில்லி டிசிபியிடமும் புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் எப்ஐஆா் பதிவு செய்யாததால், ஜலீல் மீது எஃப்ஐஆா் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை அடுத்த விசாரணைத் தேதியில் தாக்கல் செய்யுமாறு திலக் மாா்க் காவல் நிலைய பொறுப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பா் 9-க்கு பட்டியிலிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com