பூஸ்டா் தடுப்பூசி: 18-59 வயதினா் 18% மட்டுமே செலுத்தல்

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை (பூஸ்டா்) செலுத்திக் கொள்ள 18 முதல் 59 வயதினா் 77 கோடி போ் தகுதியானவா்களாக இருந்தபோதிலும், அதில் வெறும் 12 சதவீதத்தினா் மட்டுமே இதுவரையில் செலுத்திக் கொண்டுள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என 35 சதவீதத்தினா் (16.80 கோடி) முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாள்களுக்கு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரையில் மொத்தம் 15.66 கோடி பேருக்கும், அதில் ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு 10.39 கோடி பேருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 14-ஆம் தேதி வரையில் 18 முதல் 59 வயதினருக்கு வெறும் 8 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. ஜூலை 15 முதல் நாடு முழுவதும் 15,9,28,598 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 98 சதவீதத்தினா் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 92 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com