ராஜஸ்தான் மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். 
ராஜஸ்தான் மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள் ஒன்றிலிருந்து பத்து எண்ணுவதற்குள் தள்ளுபடி செய்யப்படும் என்றார். ஆனால், ராகுல் காந்தி தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பத்து எண்ணுகிற கணக்கு மறந்துவிட்டதா எனக் கேளுங்கள். நாங்கள் ராஜஸ்தான் மக்கள் குறித்து கவலைப்படுகிறோம். காங்கிரஸ் ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி அவர்களது உணர்வுகளை காயப்படுத்தி வருகிறது.

ஊழல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான அராஜகங்கள் அனைத்திலும் ராஜஸ்தான் முதலாவது மாநிலமாக உள்ளது. வேலைவாய்ப்புகள், ஊழலற்ற அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு போன்றன உறுதிசெய்யப்பட வேண்டுமென்றால் காங்கிரஸ் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அதற்கு தடையாக இருக்கிறது. காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com