அண்ணியை எதிர்த்து காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்த ஜடேஜா தங்கை!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ரிவாபா ஜடேஜாவை எதிர்த்து ஜடேஜாவின் தங்கை பிரசாரம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிவாபா ஜடேஜா
ரிவாபா ஜடேஜா

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ரிவாபா ஜடேஜாவை எதிர்த்து ஜடேஜாவின் தங்கை பிரசாரம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதில், ஜாம்நகர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இவருக்காக ஜடேஜா பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

இதற்கிடையே, ஜடேஜாவின் தங்கை நைனா ஜடேஜா சொந்த அண்ணியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஜாம்நகரில் கடந்த 10 நாள்களாக பிரசாரம் செய்த சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நைனா ஜடேஜா கூறுகையில், “இதுபோன்று நடைபெறுவது முதல்முறையல்ல. ஜாம்நகரில் உள்ள பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக பணிபுரிந்துள்ளனர். சித்தாந்தத்தின் மீது 100 சதவிகிதம் திருப்தியுடன் செயல்பட வேண்டும். சிறந்த வேட்பாளர் வெற்றி பெறுவார்.

என் அண்ணன் மீதான அன்பு எப்போதும் குறையாது. எனது அண்ணி தற்போது பாஜக வேட்பாளர். அண்ணியாக அவர் சிறந்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிச. 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com