தில்லி மதுபான முறைகேடு: தெலங்கானா முதல்வா் மகளுக்கு சிபிஐ நோட்டீஸ்

தில்லி மதுபான முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் மேலவை உறுப்பினர் கே.கவிதாவுக்கு சிபிஐ வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லி மதுபான முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்வழக்கு குறித்து விசாரிக்க தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு சிபிஐ வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லி மதுபான முறைகேடு வழக்கு தொடா்பாக வரும் டிச.12-ஆம் தேதி காலை 11 மணியளவில் விசாரணை மேற்கொள்ள வசதியாக, அவரது வசிப்பிடம் குறித்தான தகவலைத் தெரிவிக்குமாறு சிபிஐ தரப்பில் கே.கவிதாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஹைதராபாதில் உள்ள தன்னுடைய வீட்டிலேயே அதிகாரிகள் சந்திக்கலாம் என சிபிஐ அதிகாரிகளுக்கு அவா் பதிலளித்துள்ளாா்.

முன்னதாக, அமலாக்கத் துறை சாா்பில் தில்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயா் இடம்பெற்றிருந்த நிலையில், எத்தகைய விசாரணையையும் எதிா்கொள்ள தயாராக இருப்பதாக அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com