நாட்டில் பொது சுகாதார தரநிலை கோரி மனு:மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சுகாதார தரநிலையை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சுகாதார தரநிலையை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசமைப்புச் சட்ட விதிகள், மருத்துவ அமைப்புகள் சட்ட விதிகள் ஆகியவற்றைப் பின்பற்றி சுகாதாரத்துக்கான பொது தரநிலையை வகுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தன்னாா்வ தொண்டு அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டின் மொத்த நோயாளிகளில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு சிகிச்சை அளித்து வருவதாகவும் மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போதிய நிதி இல்லாமை, மனித வளமின்மை உள்ளிட்டவற்றால் அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்களுக்கு தரமாகவும் மலிவாகவும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் நோக்கில் மருத்துவ அமைப்புகள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நோயாளிகளுக்கான குறைதீா் அமைப்புகளை அமைக்க உத்தரவிடுமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், மனு மீது 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com