பள்ளியில் என்னதான் நடக்கிறது? 39 மாணவிகளுக்கு இந்த நோயா?

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 39 மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் வெறிபிடிக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறத
பள்ளியில் என்னதான் நடக்கிறது? 39 மாணவிகளுக்கு இந்த நோயா?
பள்ளியில் என்னதான் நடக்கிறது? 39 மாணவிகளுக்கு இந்த நோயா?


டெஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 39 மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் வெறிபிடிக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போல சில மாணவிகள் தலை முடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக கத்திக் கொண்டும் அழுதுகொண்டும் வகுப்பறையிலிருந்து வெளியே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

கூட்டாக இத்தனைப் பேருக்கு வெறிபிடிக்கும் நோய் ஏற்படுமா என்று கலக்கத்தோடு விசாரணை நடத்தி வருகிறது பள்ளிக்கல்வித் துறை. மாணவிகளின் பெற்றோர்களோ, ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாகக் கலக்கம் அடைந்துள்ளனர்.

ராமக் அரசுப் பள்ளியில் 82 மாணவிகளும் 69 மாணவர்களும் பயில்கிறார்கள். இது பற்றி பள்ளி நிர்வாகம் கூறுகையில், திடீர் திடீரென மாணவிகள் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் தலைவலிக்கிறது என்கிறார்கள். பிறகு இவ்வாறு கத்திக் கொண்டே ஓடுகிறார்கள். நாள்தோறும் பள்ளித் தொடங்கியதும் குறைந்தது 5 மாணவிகளுக்காவது இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று என்ன நடக்கிறது என புரியாமல் கூறுகிறார்கள் ஆசிரியைகள்.

மருத்துவர்கள் அடங்கிய குழு பள்ளிக்குச் சென்று மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இப்படி பல மாணவிகளுக்கு ஒரே பிரச்னை வந்திருப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது.

இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தமாக இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் கருதுகிறார்கள். படிப்பில் அதிகப்படியான அழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது ஒருசிலருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதனைப் பார்க்கும் பெண்களுக்கு தங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் அல்லது இருப்பதாக நினைப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com