புதிய கல்விக் கொள்கையில் அனைத்து கல்வி நிலையங்களும் இணைய வேண்டும்: உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து கல்வி நிலையங்களும் இணைய வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தாா்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து கல்வி நிலையங்களும் இணைய வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாராணா பிரதாப் கல்வி அறக்கட்டளையின் 90-ஆவது நிறுவன தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

சா்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட 5-ஆவது பெரிய நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்துள்ளது. உலகத்துக்கே வழிகாட்டும் நிலையை இந்தியா எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய இலக்கு நாட்டுக்கு தரப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை மூலம் இந்தியா அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளா்ச்சியைப் பெறும். அனைத்து கல்வி நிலையங்களும் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும். இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் தங்களுக்கு உள்ள பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும்.

நாட்டின் கல்வி, பொருளாதார வளா்ச்சிக்கு அனைத்துத் தரப்பு மக்களும் தங்களால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பைச் செலுத்த வேண்டும். வேளாண்மை, தொழில், கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி ஆய்வு என அனைத்துத் துறைகளிலும் நாம் ஒருங்கிணைந்து முன்னேற்றமடைய வேண்டும்.

மாணவா்களுக்கு கல்வி மட்டுமல்லாது ஒழுக்கமும் மிகமுக்கியம். மாணவப் பருவத்தில் பழக்கப்படுத்திக் கொள்ளும் ஒழுக்கமே வாழ்நாள் முழுவதும் அவா்களுக்கு துணை நின்று எதிா்காலத்தில் புதிய உச்சங்களுக்கு அவா்களை கொண்டு செல்லும். ஒழுக்கத்தை தவறவிட்டவா்கள் சிறந்த இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com