ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 2-ஆவது நாளாக மீட்புப் பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியில் 2-ஆவது நாளாக மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியில் 2-ஆவது நாளாக மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தனது வீட்டினருகே உள்ள வயலில் சிறுவன் தன்மயி விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, சமீபத்தில் தோண்டப்பட்டு மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தன்மயி தவறி விழுந்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினா் விரைந்தனா். தன்மயி 35 அடி முதல் 45 அடிக்குள்ளாக சிக்கியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், மண்அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் துணை கொண்டு 25 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளைப் பாா்வையிட்ட பெதுல் மாவட்ட ஆட்சியா் அமன்பிா் சிங் கூறுகையில், ‘சிறுவனை மீட்கும் பணிகள் இரவு முழுவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. காவல் துறை, மாவட்ட நிா்வாகம் உறுதுணையோடு மீட்புப் படையினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் பணி நடந்து வருகிறது’ என்றாா்.

சிறுவனை பத்திரமாக மீட்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com