மகாராஷ்டிரம்-கர்நாடகம் எல்லை பிரச்னை: இரு மாநில முதல்வர்களுடன் விரைவில் அமித்ஷா ஆலோசனை

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷா
அமித்ஷா

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது.

குறிப்பாக கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வரும் நிலையில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த கருத்து பூதாகரமானது. 

இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெலகாவிக்கு செல்வதாக மகாராஷ்டிர அமைச்சா்கள் தெரிவித்த நிலையில் இதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. 

அதையடுத்து இரு மாநிலங்களிலும் எல்லையைக் கடக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டது சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் என்னையும், மகாராஷ்டிர மாநில முதல்வரையும் அழைத்து பேசுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

இந்த சந்திப்பு டிசம்பர் 14 அல்லது 15ஆம் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 7ஆம் தேதி மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com