ரூ.352 கோடி கடன் மோசடி: நகை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

ஜல்கோன் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மூன்று நகை தயாரிப்பு நிறுவனங்கள், எஸ்பிஐ வங்கியில் ரூ.352 கோடி கடன்பெற்றுவிட்டு மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ரூ.352 கோடி கடன் மோசடி: நகை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு
ரூ.352 கோடி கடன் மோசடி: நகை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

புது தில்லி: ஜல்கோன் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மூன்று நகை தயாரிப்பு நிறுவனங்கள், எஸ்பிஐ வங்கியில் ரூ.352 கோடி கடன்பெற்றுவிட்டு மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மூன்று தனித்தனி முதல்தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அளித்திருக்கும் புகாரில், எஃப்.ஐ.ஆர்-பெயரிடப்பட்ட நிறுவனங்களின் கணக்குகள் ராஜ்மல் லக்கிசந்துக்கு கொள்முதல் செய்ததற்காக பணம் செலுத்தியதைக் காட்டுகின்றன, ஆனால் அதற்கு விற்கப்பட்ட பொருட்களுக்கான வரவுகள் நிலுவையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் காட்டப்பட்ட நிலையான சொத்துக்கள் வங்கிக்குத் தெரியாமல் வேறொருவருக்கு மாற்றம்செய்யப்பட்டிருப்பதாகவும் வங்கி தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடன் தொகைக்கு ஈடாக பெற்றப்பட்ட இல்லை என்று ஆனதன் மூலம், மிகப்பெரிய கடன்களை வசூலிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்று, அவை எதற்காகப் பெறப்பட்டதோ, அதற்கு அல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு திருப்பி விடுவதன் மூலம் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் வங்கி குற்றம் சாட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com