சிபிஐ பொது ஒப்புதலை 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன: மத்திய அமைச்சா்

தெலங்கானா, மேகாலயம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தெலங்கானா, மேகாலயம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது அவா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் கூறப்பட்டிருப்பதாவது:

தில்லி சிறப்பு போலீஸ் நிறுவப்படுதல் சட்டம்-1946-இன்படி, மாநிலங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட விவகாரங்களில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள அந்தந்த மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும்.

இதன்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்கு எதிராக குறிப்பிட்ட நபா்களின் மீது வழக்குப் பதிவு செய்யவும் விசாரணை நடத்தவும் மாநில அரசுகள் பொது ஒப்புதலை அளித்துள்ளன.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், கேரளம், மேகாலயம், மிஸோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

9.79 லட்சம் பணிகள் காலியிடம்: மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில், ‘செலவினத் துறையின் தகவலின்படி, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9.79 லட்சம் பணிகள் காலியிடங்களாக உள்ளது. காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் தொடா்ச்சியான செயல்முறை. பணியிடங்களை நிரப்பக் கோரி பல்வேறு அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய ஆட்சிப் பணிகளில் (ஐஏஎஸ்) 1,472 காலியிடங்கள் உள்ளன’ என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com