ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்த பொருளுக்கும் வரி உயர்வில்லை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எந்தப் பொருளுக்கும் வரி உயர்த்தப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எந்தப் பொருளுக்கும் வரி உயர்த்தப்படவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், எட்டு தீர்மானங்கள் குறித்து இந்த 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மற்ற விவகாரங்கள், அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

மேலும், அகரவரிசையில் முதல் ஏழு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கூடுதலாக, தரவுகள் பரிமாற்ற விவகாரமும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தப் பொருளுக்கும் வரி உயர்வு மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல, எந்த ஒரு புதிய பொருளும் வரி விதிப்பு நடைமுறைக்குள் கொண்டுவரப்படவில்லை என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக சனிக்கிழமை நடைபெறும் இந்த 48-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சா், மாநில நிதித் துறை அமைச்சா்கள், மத்திய-மாநில மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சகம் ட்விட்டா் பதிவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com