தில்லியில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை (டிச.17) நடைபெற்று வருகிறது. 
தில்லியில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை (டிச.17) நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் ஒரே வரியாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதலாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார். 

இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தையங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாக ஆலோசனை நடத்த பரிந்துரைத்து ஜிஎஸ்டி கவுன்சில் சாா்பில் அமைக்கப்பட்ட மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான மாநில அமைச்சா்கள் குழு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கடந்த வியாழக்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது. எனவே, அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மேலும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை மாற்றியமைப்பது, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com