சீனாவுக்கு ஆதரவாக பேசுகிறாரா ராகுல் காந்தி?

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக பேசுவதுபோல இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டுமென பாஜக  தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு ஆதரவாக பேசுகிறாரா ராகுல் காந்தி?

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக பேசுவதுபோல இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டுமென பாஜக  தெரிவித்துள்ளது.

இது நேருவின் இந்தியா அல்ல, சீன அரசு போருக்குத் தயாராகி வருகிறது. ஆனால் இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று (டிசம்பர் 17) விமர்சித்தார். இதனையடுத்து, பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் ராகுலின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக பேசுவதுபோல இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியதாவது: ராகுல் காந்தியின் இந்த செயல் அவரது நாட்டுப்பற்று மீது சந்தேகம் கொள்ளச் செய்கிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் தாக்குதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இது அவரது திவாலான மனநிலையைக் காட்டுகிறது என்றார்.

ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாராலும் இயக்கப்படமால் நாட்டின் பக்கம் நிற்பது உண்மையானால் இந்தியாவை அவமதிக்கும் விதமாக பேசிய ராகுல் காந்தியினை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும். ராகுல் காந்தி இந்திய ராணுவத்தினை இழிவுப்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார். அவர் தொடர்ந்து இந்திய ராணுவத்தை அவமதித்து வருகிறார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com